இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

ஆடி மாதம் என்றாலே  அம்மன் மாதம் தான்.  அந்த அளவுக்கு ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களில் பண்டிகைகள் திருவிழாக்கள் களைகட்டும்.  
அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கோமதி அம்மன் கோயில். ஆடி மாதத்தில், சங்கரன்கோவில் கோமதி அம்மன் புன்னைவன காட்டில் தவம் இருந்தார். இறைவன் ஒருவனே என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில்   ஆடி மாதம் உத்திராட நட்சத்திரம் அன்று, தவம் இருக்கும் கோமதிக்கு அம்மனுக்கு சங்கரநாராயணன் காட்சியளித்தார். இந்நிகழ்வு அங்கு ஆடித்தபசு திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். .

உள்ளூர் விடுமுறை

இதன் அடிப்படையில்  தென்காசி மாவட்டத்தில்  இன்று திங்கட்கிழமை  31.7. 2023  ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நிறுவனங்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடித்தபசு
இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகள் , தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள், இது குறித்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19.08,2023 சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும். திங்கட்கிழமை பாட வேளையினை பின்பற்றி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web