இன்றைய தங்கம், வெள்ளி விலை விபரம் - நகைப்பிரியர்களுக்கு நிம்மதி!
Oct 8, 2026, 10:21 IST
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்று எந்தவித மாற்றமும்மின்றி, நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,710-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,09,680-க்கும் எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, கடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.
அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் நிலவி வரும் இந்த ஸ்திரத்தன்மை நகை வாங்குவோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
