ஏப்ரல் இறுதிக்குள் சேட்டிலைட் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்... மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறைப்படி Fastag கணக்கில் ஓட்டுநர்/வாகன உரிமையாளர் ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும். டோல்கேட் கடந்து செல்லும் போது Fastag பார் கோடு மூலம் ஸ்கேன் செய்து சுங்கக்கட்டணம் வங்கி கணக்கு வாயிலாக நேரடியாக வசூல் செய்யப்பட்டுவிடும்.
இதன் மூலம் வசூல் செய்யப்படுவதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகமான சில சமயங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இதனை தடுக்கும்வகையில் சாட்டிலைட் (செயற்கைகோள்) வழியாக சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.
இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி செயற்கைகோள் வழியாக சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படும் முறை இந்தியா முழுவதும் அடுத்த 15 நாட்களுக்குள் (ஏப்ரல் இறுதிக்குள்) அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.
வாகனங்கள் எங்கு செல்வது என்பதை கண்காணிக்க GNSS (Global Navigation Satellite System) பொருத்தப்படும் எனவும் அந்த சாட்டிலைட் மூலம் வாகனங்கள் எங்கிருந்து எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை கணக்கிட்டு நேரடியாக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்கும் சூழல் வெகுவாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறை மூலம் வசூல் செய்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் தினமும் இரு திசைகளிலும் 20 கி.மீ வரை கட்டணமில்லா பயணம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்படும் போது தான் இதன் முழு விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!