நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
சுங்கச்சாவடி
 இந்தியா முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்படும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி சுங்கச்சாவடி கட்டணங்கள் நாளை முதல் மாறப்போகுது. அதாவது உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 5 சுங்கச்சாவடிகளில் ரூ5 முதல் ரூ20 வரை உயர்த்தப்பட்டுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு அவை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கட்டண உயர்வு  ஏப்ரல்.-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

சுங்கச்சாவடி

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதியும் மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதியும் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு ஏப்ரல்1ம் தேதி முதல் கட்டணன்க்கள்  உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி

இதில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்கிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web