மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தக்காளி

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் வடமாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்கனமழை,விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடந்த சில வாரங்களாக ரூ100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  தொடர் மழையால் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும்   அத்தியாவசிய காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால்  வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

 தக்காளி


அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரூ100 க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகள், பசுமை பண்ணை கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் மட்டுமே குறைந்த தக்காளியின் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  ஒரு கிலோ தக்காளி 150 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2  நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ80  வரை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 தக்காளி


இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று கிலோவிற்கு ரூ30 அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ140  முதல் ரூ150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ150 முதல் ரூ160  வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web