கிலோ ரூ60க்கு தக்காளி!! குஷியில் இல்லத்தரசிகள்!!

 
தக்காளி

தமிழகத்தில் தொடர் மழை விளைச்சல் மற்றும் வரத்து குறைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. தமிழக அரசு விலையை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகள் மற்றும் பசுமை நுகர்வோர் பண்ணை கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்து வந்தன. இதனால் தக்காளி விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

தக்காளி

இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ80முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனை செய்யப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.  லத்தில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

சேலத்தில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், ஜங்ஷன், சூரமங்கலம், புதுரோடு ஆகிய பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி இன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் தக்காளியை வாங்கிச் சென்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web