தக்காளி அதிரடி விலைக்குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தக்காளி

இந்தியா முழுவதும் பருவமழை விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக  தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோ ரூ30க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி  சென்னையில் 1 கிலோ தக்காளி ரூ180 வரை விற்பனை செய்யப்பட்டதால்  பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தக்காளியோடு சேர்ந்து சின்ன வெங்காயம் மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது  நடுத்தர மக்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

தக்காளி


 தொடர் மழையால் தக்காளி சாகுபடி குறைந்துள்ளது. தக்காளி விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்நிலைமை சீராக மேலும் சில வாரங்கள் ஆகலாம் என வியாபாரிகள் கூறினர். இந்நிலையில், தட்டுப்பாடு காரணமாக வட மாநிலங்களில் கிலோ 230 முதல் 260 ரூபாய் விமேற்பனை செய்யப்பட்டது.   ஆந்திரா ,கர்நாடகா  மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!
சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினசரி தக்காளி தேவை  1100 டன்னாக இருந்து வரும் நிலையில் இன்றைய விலை நிலவரப்படி தக்காளி வரத்து அதிகரித்திருந்தது.  இதனால் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ 100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பெங்களூர்  தக்காளியின் விலை கிலோ ரூ 130  க்கும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ160க்கும், பெரிய வெங்காயத்தின் விலை ரூ20 க்கும், உருளைக் கிழங்கு ஒரு கிலோ ரூ 30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web