இன்று தக்காளி விலை குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தக்காளி

 
இந்தியா முழுவதும்ஜூலை மாத தொடக்கம் முதலே தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தொடர் மழை,விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை உயர்வு மேலும் சில வாரங்கள் நீடிக்கலாம் என்கின்றனர்வியாபாரிகள். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் அளவு குறைவதால் தமிழகத்தில் இந்த விலை உயர்வு காணப்படுவதாக கூறுகின்றனர்.

தக்காளி

ஜூலை 1ம் தேதி கிலோ ரூ50க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியின்விலை நேற்று  ஆகஸ்ட் 2ம் தேதி கிலோரூ200க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சற்றே விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று வரை கோயம்பேடு சந்தைக்கு 300 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில் இன்று400 டன் தக்காளி வந்துள்ளது. இதனால் தான் இந்த விலை குறைப்பு என்கின்றனர் வியாபாரிகள்.  

தக்காளி

இந்நிலையில் தக்காளியின் விலை மொத்த விற்பனையில் இன்று அதிரடியாக குறைந்து 135 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதே சில்லறை விற்பனை கடைகளை பொறுத்தவரை ஒரு கிலோ தக்காளி ரூ140 முதல் 150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சற்றே விலை குறைந்திருப்பது ஹோட்டல் உரிமையாளர்கள், சிறு வணிகர்கள், இல்லத்தரசிகள் இடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web