ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தம்!!

 
ரேஷன் தக்காளி

கடந்த ஒரு மாத காலமாக போக்கு காட்டிய தக்காளி விலை குறைந்ததால் அனைத்து ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.  ஆனால்  பண்ணை பசுமை கடைகளில் கிலோ தக்காளி கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடலூர் உட்பட பல   மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ ரூ20க்கும், சில இடங்களில் ரூ. 30 மற்றும் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னையை பொறுத்தவரை  முதல் ரக தக்காளி ரூ. 50க்கும், 2ம் ரக தக்காளி ரூ.30-40க்கும், மூன்றாம் ரக தக்காளி விலை ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக ஜூலை மாத தொடக்கம் முதலே தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. இந்த விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் கடும் அவதிப்பட்டனர்.  சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை  ரூ 200 வரை விற்பனை செய்யப்பட்டது.  மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா   மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.  

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

இதனால் வரத்தும் குறைந்து விட்டது. தக்காளியை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய போலீள்  தக்காளியால் கோடீஸ்வரர் , சிவப்பு தங்கம் என பலப்பல கதைகள் . தற்போது தக்காளி விலை கிலோ  வெறும் ரூ 20, 30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தக்காளியை வைத்து மீம்ஸ்கள் களைகட்டின.  தக்காளி தோட்டத்திற்கு சிசிடிவி கேமரா, தக்காளி கடைகளில் கேமிராக்கள்  ஹோட்டலில்  கணவர் சமையலுக்கு கூடுதலாக தக்காளி பயன்படுத்தியதால் மனைவி கோபித்து வெளியேறிய கதைகளும் உண்டு.

தக்காளி விலை உயர்வு

 நேற்றைய தினம் கிலோ தக்காளி ரூ 90 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தக்காளியின் விலை கிலோ ரூ 40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது போல் பொடி தக்காளி, அதாவது பார்ப்பதற்கு இலந்தை பழம் சைஸில் உள்ள  தக்காளி கிலோ ரூ 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை சற்று குறைந்ததால் இல்லத்தரசிகள் சற்றே ஆசுவாசப்பட்டுள்ளனர். இதனால் காய்கறி  மார்க்கெட்டுகளில் கூட்டம் அலை மோதுகிறது.  இன்று விட்டால் தக்காளி விலை மேலும் கூடிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் கடைகளில் தக்காளியை வாங்கி குவித்து வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web