தக்காளி, வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் கவலை!

 
சின்ன வெங்காயம் தக்காளி

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நிலவிவரும் வறட்சி காரணமாகத் தக்காளி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகச் சென்னை கோயம்பேடு சந்தைக்குத் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாகத் தினசரி வந்து கொண்டிருந்த 55 லாரி லோடு தக்காளிக்குப் பதிலாக, தற்போது வெறும் 35 லாரிகளே வருவதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தக்காளி சின்ன வெங்காயம்

வரத்துக் குறைவு காரணமாக வெளிச்சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தக்காளி

தக்காளியைத் தொடர்ந்து, பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வெளிச்சந்தையில் கிலோ ரூ.80 வரை விற்கப்படுகிறது. அத்தியாவசியக் காய்கறிகளின் தொடர் விலை உயர்வு பொதுமக்களையும் இல்லத்தரசிகளையும் பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.