நாளை ஒரே நாளில் திருப்பரங்குன்றம் கோயிலில் 102 ஜோடிகளுக்குத் திருமணம் - கோயில் நிர்வாகத்திற்கு ரூ.4.59 லட்சம் வருவாய்!

 
திருப்பரங்குன்றம்

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை ஒரே நாளில் 102 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம்

இக்கோயிலில் முதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், திருமணத்திற்குக் குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

ஒரு ஜோடிக்குத் திருமணக் கட்டணமாக ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் நாளை ஒரே நாளில் மட்டும் கோயில் நிர்வாகத்திற்குத் தோராயமாக ரூ.4.59 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.