இன்று Share Market NSE, BSE-க்கு விடுமுறை - அடுத்த வர்த்தக நாள் எப்போது.. எந்தெந்த பங்குகள் உயர வாய்ப்பு!?

 
NSE

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளான NSE மற்றும் BSE-க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பங்குகள் வாங்குவது, விற்பது உள்ளிட்ட வழக்கமான ஈக்விட்டி வர்த்தகம் நடைபெறாது. ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் பிரிவுக்கும் விடுமுறை பொருந்தும். 

இன்று செப்.14 திங்கட்கிழமை விடுமுறைக்குப் பிறகு, நாளை செப்.15 செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்.  இதனால் சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் சேர்த்து செப்.12 முதல் செப்.14 வரை தொடர்ந்து 3 நாட்கள் NSE மற்றும் BSE வர்த்தகம் நடைபெறாது.

MCX-ல் இன்று காலை அமர்வு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு மாலை அமர்வு மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்க இருப்பதால் வங்கி தொடர்பான பங்குகள் விலை உயரக் கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கம் விலையில் மாற்றங்கள் இருக்கும். இது பங்கு வாங்கி, விற்பதற்கான பரிந்துரை கிடையாது.