நாளை அக். 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் - பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்!

 
அக்டோபர் 1

நாளை அக்டோபர் 1 முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, நிதி சார்ந்த பரிமாற்றங்கள் மற்றும் அரசு சேவைகளில் பல முக்கிய மாற்றங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. கூகுள் தரவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து தெரிஞ்சுக்கோங்க.

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் - பயோமெட்ரிக் கட்டாயம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் தடையின்றித் தொடர்ந்து கிடைக்க, நுகர்வோர் தங்களது பயோமெட்ரிக் அங்கீகாரப் பணியை முடிக்க வேண்டும். 

ஏற்கனவே 90 சதவீதத்திற்கும் அதிகமான நுகர்வோர் இந்தச் சரிபார்ப்பை முடித்துவிட்ட நிலையில், இன்னும் முடிக்காதவர்கள் எரிவாயு விநியோகத்தின் போதே டெலிவரி பணியாளர்கள் மூலமாகவோ, சமையல் எரிவாயு முகவர் அலுவலகங்களிலோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் (IndianOil ONE, HelloBPCL, HP PAY) மூலமாகவோ எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். விடுபட்டவர்களுக்கு மானியத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே சரிபார்ப்பது அவசியமாகும். இதற்கான கடைசி தேதி இன்றுடன் நிறைவடைகிறது.

கேஸ் சிலிண்டர்

சொத்து வரி செலுத்தும் நடைமுறை மற்றும் காலக்கெடு

நடப்பு ஆண்டிற்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியைச் செலுத்த மற்றும் பிற மாநகராட்சிகளில் குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. உரிய காலத்திற்குள் வரியைச் செலுத்தத் தவறினால் நிலுவைத் தொகைக்கு மாதந்தோறும் அபராத வட்டி விதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி இணையதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் மூலமாக உடனுக்குடன் வரியைச் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மை

அக்டோபர் 1 முதல் வங்கிகள் தங்களது நிலையான வைப்புத்தொகை மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான அட்டவணையை மிகவும் வெளிப்படையாக முன்கூட்டியே வெளியிட வேண்டும். வெவ்வேறு கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு இடையே வட்டி விகிதங்களில் குழப்பம் ஏற்படாதவாறு ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி சீரான நடைமுறை பின்பற்றப்படும்.

பிறப்பு சான்றிதழ்

பிறப்பு மற்றும் இறப்பு தாமதப் பதிவு:

ஒரு வருடத்திற்கு மேல் தாமதமாகச் செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு சான்றிதழ்களுக்கு கடுமையான சரிபார்ப்பு முறைகளும், குறிப்பிட்ட காலத்திற்கு மேற்பட்ட வழக்குகளில் நடுவர் நீதிமன்ற அல்லது உரிய நிர்வாக அதிகாரிகளின் அனுமதியைப் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரி மற்றும் மூலதன ஆதாயத் தாக்கல்கள்:

சொத்து விற்பனை மற்றும் மூலதன ஆதாயங்கள் தொடர்பான கணக்கீடுகளில் புதிய TDS மற்றும் அட்டவணை விவரங்கள் சேர்க்கப்பட்டு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.