நாளை கடைசி தேதி... டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு... ரூ.50,000 வரை சம்பளம்!

 
தமிழக அரசு உதவித்தொகை கடன் திட்டம் ரூபாய் ரொக்கம் லோன் தமிழக அரசு உதவித்தொகை கடன் திட்டம் ரூபாய் ரொக்கம் லோன்

நாளை கடைசி தேதி. டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் (TNSC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  Deputy Manager (Production / Technical / Operation and Maintenance), Assistant Engineer (Civil), Supervisors

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் தேர்வு

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் B.E / B.Tech அல்லது ITI Fitter உடன் ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் (PG Degree) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குப் பணியின் தன்மைக்கு ஏற்ப மாதம் ரூ.35,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு முகாம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் https://tnsalt.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.