நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்!
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் டிசம்பரில் காலமானார். இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. ஜனவரி 7 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

டிசம்பர் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12ம் தேதி விடுமுறை நாள். அதைத்தொடர்ந்து டிசம்பர் 13ம் தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது 6 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.

மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஜனவரி 18ம் தேதி சனிக்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜனவரி 20ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் பிப்ரவரி 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
