நாளை அமாவாசை... வீட்டிலேயே பித்ரு தோஷம் விலக எளிய பரிகாரம்!

 
அமாவாசை

நாளை சித்திரை மாத அமாவாசை திதி வருகின்றது. ஒவ்வொரு அமாவாசையன்றும் நீர் நிலைகளைத் தேடியோ, ஆறு, குளங்களைத் தேடியோ செல்ல வேண்டியதில்லை. வெளியூர்களில் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும், அலுவல் காரணமாக பயணத்தில் இருந்தாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தப்படியே நமது முன்னோர்களுக்கு எளிய முறையில் தர்ப்பணம் தந்து அவர்களை சாந்தப்படுத்தலாம்.

பொதுவாக ஏறுபொழுதில், தர்ப்பணம் செய்து முடித்து விடுங்க. அமாவாசை தினத்தில் அடிப்படையான சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி தவறாமல் கடைப்பிடித்து வந்தாலே பித்ரு தோஷங்கள் நம்மை விட்டு விலகி விடும். 

பித்ரு தோஷம் நீங்க வீட்டிலிருந்தே எளிய பரிகாரம்!

அமாவாசை தினங்களில், நீங்கள் ஊரில் இல்லாமல் இருந்தாலோ, அல்லது நீர் நிலைகளில் சமயங்களில் உங்களால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர முடியவில்லை என்றாலோ என்ன செய்வது என்ற குழப்பத்திலும், பித்ருக்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள் குறித்தும் பார்க்கலாம் வாங்க. 

இந்து தர்மங்களின் படி அமாவாசை என்பது பித்ருக்களுக்கு சாந்தியடைய செய்யும் விரத முறைகளில் மிக மிக முக்கியமான நாளாகும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் அமாவாசை தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து, விரதத்தைத் தொடங்கி விட வேண்டும். காலையில் முழுவிரதம் இருந்து மனதில் வீட்டு பெரியோர்கள், முன்னோர்களை வணங்கி மதியம் சாப்பாடு தயாரித்து சூரியன் வந்ததும் படையலிட வேண்டும்.

பித்ரு தோஷம் நீங்க வீட்டிலிருந்தே எளிய பரிகாரம்!

மேலும் சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தும் விரதம் இருக்க வேண்டியது அவசியம். இதன் பிறகு கடவுளை வழிபட்டு மதியம் உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும். உங்களால் இவை எதையும் செய்ய முடியவில்லை என்றாலும் கவலையில்லை. கையில் சிறிதளவு கறுப்பு எள் எடுத்துக் கொண்டு, மனதுள் உங்கள் முன்னோர்களை நினைத்துக் கொண்டு, உள்ளங்கையில் எள் வைத்துக் கொண்டு, நீர் விட்டு பிரார்த்தனை செய்தாலே பித்ருக்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். உங்கள் பிரார்த்தனையும், எள்ளும், நீரும் இறைப்பது தான் முக்கியம். அந்த எள் அவர்களுக்கு உணவாகவும், கீழே இறைத்து விடுகின்ற நீர் அவர்களுக்கு குடிநீராகவும் செல்லும் என்பது ஐதீகம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web