நாளை ரோப்கார் சேவை செயல்படாது!!

 
ரோப்கார்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருடம் முழுவதும் வருகை தருவர். சாமி தரிசனம் செய்வதற்காக  முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை  கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை பாதை  என 2 வழிகள் உள்ளன. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது .

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

விரைவாகவும்,  இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார்  மற்றும் மின் இழுவை ரயிலில் செல்ல முடியும்.  தினசரி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் இயக்கப்படும். பராமரிப்பு பணிக்காக பிற்பகலில் ஒரு மணி நேரமும் மாதத்தில் ஒருநாளும் ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  சில நிமிடங்களிலேயே ரோப்கார் மூலம்  மலை  கோயிலின்  உச்சிக்கு சென்றுவிடமுடியும். இதனால்  பக்தர்கள் மத்தியில் ரோப் கார் சேவை பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  

 

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!
இந்நிலையில் நாளையில் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நாளை ஜூலை 27ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிக்காக   பழனி முருகன் கோயிலில் ரோப் கார் வசதி இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web