2 நாட்கள் பயணமாக கத்தார் மன்னர் இந்தியா வருகை !

கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி நாளை இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாளை முதல் இரு நாட்கள் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். கத்தார் மன்னருடன் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகக் குழு உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகைத் தரவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் 17, 18ம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். கத்தார் மன்னருக்கு 18ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டு ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கலந்துரையாடுவார். அப்போது மன்னருக்கு விருந்து அளிக்கப்படும். பின்னர் கத்தார் மன்னர்-பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இந்தியாவும் கத்தாரும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகம் கத்தாரின் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகத்தை உருவாக்குகிறது என தெரிவித்துள்ளது. கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2வது முறையாக வருகிறார். இதற்குமுன்பு 2015ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.