தமிழகத்தில் டன் கணக்கில் கேரள மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்ற மர்ம நபர்கள்!

 
மருத்துவக்கழிவு மருத்துவ கழிவு

 

 

கேரள மாநிலத்திலிருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கொட்டப்படும் அராஜகம் மீண்டும் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகில் டன் கணக்கில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் எழுந்த நச்சுப்புகையால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் ஒதுபுறமான பகுதிகளில் மர்ம நபர்கள் நள்ளிரவில் கேரள மருத்துவக் கழிவுகளைத் தாராளமாகக் கொட்டிச் சென்றுள்ளனர்.

மருத்துவக் கழிவு

இவ்வாறு கொட்டப்பட்ட டன் கணக்கான மருத்துவக் கழிவுகளில் சில சமூக விரோதிகள் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக உருவான கடுமையான நச்சுப்புகை அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்குக் கண் எரிச்சல் மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.

கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் கழிவுகளைச் தமிழகப் பகுதிக்குள் கொண்டு வந்து ரகசியமாகக் கொட்டும் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக நடந்துள்ளன. இதற்கு அப்போதே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதோடு, எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மீறி கொண்டு வரப்படும் லாரிகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

மருத்துவக்கழிவு கழிவு

இருப்பினும், காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சிப் போக்குகளின் தளர்வான கண்காணிப்பைப் பயன்படுத்தி, லாரி உரிமையாளர்கள் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகச் சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

விவசாய நிலங்களையும் நிலத்தடி நீரையும் நாசமாக்கும் வகையில் கேரள மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டும் லாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் கோரிக்கைகள் வலுத்துள்ளன. எல்லைப் சோதனைச் சாவடிகளில் மருத்துவக் கழிவுகள் மற்றும் ஆபத்தான இரசாயனங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைச் தீவிரமாகச் சோதிக்க வேண்டும்.

மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.