இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் இவங்க தான்... ஃபோர்ப்ஸ் கருத்துக்கணிப்பு!

 
பணக்காரர்கள்

 அமெரிக்க போபர்ஸ் பத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிட்ட கருத்துக்கணிப்பில் இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருந்து வருகிறார்.  அவரது நிகர சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலர்.  ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளில் பெரும் பகுதியை முகேஷ் அம்பானியிடம் தான் உள்ளது. அதே போல்  அதானி குரூப்சின் தலைவரான கவுதம் அதானி, 2வது இடத்தில் உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர்.மூன்றாவது இடத்தில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் சிவ் நாடார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 36.9 பில்லியன்  . தற்போது, இந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை சிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்கோத்ரா ஏற்று நடத்தி வருகிறார்.

பணக்காரர்கள்
4 வது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் 4வது இடத்தில் உள்ளார். 35.5 பில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துக்களை வைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்தார். இந்தியாவில் பெண் செல்வந்தர்கள் பட்டியலில் இவர் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  அதே போல் சர்வதேச அளவில் பெரும் மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மாசூடிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் திலீப் ஷங்க்வி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 26.7 பில்லியன் டாலர்  .அடுத்ததாக  21.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சைரஸ் பூனாவால்லா 6வது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் தடுப்பூசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீரம் இன்ஸ்டுயூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் பூனாவால்லா ஆவார்.

பணக்காரர்கள்
ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப் லிமிடெட்டின் தலைவராக இருக்கும் குஷால் பால் சிங் 7வது இடத்தில் 20.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். 8வது இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார மங்களம் பிர்லா உள்ளார். இவரது சொத்து மதிப்பு 19.7 பில்லியன் டாலர்.அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தமானி, 9வது இடத்தில் உள்ளார். இந்நிறுவனம் சில்லறை வர்த்தகம் செய்யும் டி – மார்டை நடத்துகிறது. இவரது நிகர சொத்து மதிப்பு 17.6 பில்லியன் டாலராக உள்ளது. இவரைத் தொடர்ந்து 10வது இடத்தில் உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான ஏர்செலோர்மிட்டல்-ன் தலைவர் மற்றும் சிஇஓ-வான லக்ஷ்மி மிட்டல் உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 16.4 பில்லியன் டாலர்.
இந்த செல்வந்தர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பும் கடந்த ஆண்டை விட 41 சதவீதம் அதிகரித்து 954 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web