ஒரு வாரமாக வனத்துறைக்கு தண்ணீ காட்டும் சிறுத்தை... தஞ்சாவூருக்கு இடம்பெயர்வு?

 
சிறுத்தை

கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறி வந்தது வனத்துறை. இந்நிலையில், இந்த சிறுத்தை தஞ்சாவூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. முதலில், மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று தென்ப்பட்டது. அப்பகுதியில் தெருநாய்களை வேட்டையாட சிறுத்தை ஓடுவது போன்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

 

சிறுத்தை

 

சிறுத்தையை வனத்துறையினர் 5 நாட்களாக தொடர்ந்து தேடி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக, வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வன நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் இருந்த பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிவாய்ப் பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சிறுத்தை

 

சிறுத்தையை கண்டுப்பிடிக்கும் தேடுதல் பணி நடந்து வருகிறது. மேலும், கோவையில் உள்ள WWF இந்தியா வல்லுநர்கள் குழு 30 கேமரா பொறிகளை கொண்டு சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கப்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது தஞ்சாவூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web