குழந்தையின் அந்தரங்க உறுப்பைத் தொடுவது குற்றமே - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
சிறுமி பாலியல் பலாத்காரம்

ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பைத் தொட்டு முத்தமிடுவது போக்சோ சட்டப்பிரிவு 3 மற்றும் 4-ன் கீழ் கடுமையான ஊடுருவல் பாலியல் வன்கொடுமை குற்றமாகும் என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது.

14 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் முத்தமிட்டதற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

கேரள கேரளா  உயர்நீதிமன்றம்

இத்தகைய செயல்கள் வெறும் எளிய பாலியல் தொல்லைகள் கிடையாது என்றும், அது நேரடியான பாலியல் வன்கொடுமைக் குற்றத்தின் கீழ் வரும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.