குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

 
குற்றாலம்

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாகக் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகச் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாவட்டத்தையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் எதிரொலியாகக் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளும் சபரிமலை பக்தர்களும் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றால குற்றாலம் அருவி

நேற்றுக் மதியத்திற்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்குள் பலத்த மழை பெய்ததால் அருவிகளுக்கு நீர்வரத்து திடீரெனப் பெருக்கெடுத்தது. குறிப்பாக ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் மாலை 6 மணி முதல் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மெயின் அருவியிலும் நீர்வரத்து ஆபத்தான அளவில் அதிகரித்துக் காணப்பட்டதால், பாதுகாப்பு கருதி இரவு 8 மணி முதல் அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாளில் அருவிகளில் குளிக்க முடியாமல் போனதால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 6வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

குற்றாலம் மட்டுமின்றி கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.