சுற்றுலா பயணிகளே உஷார்.. இந்த வீடியோக்களை பதிவு செய்தால் நடவடிக்கை கன்பார்ம்!
சுற்றுலா செல்லும்போது, அங்கு காணும் அனைத்தையும் வீடியோவாக எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற ஒரு தம்பதி அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் நாம் சுற்றுலா செல்லும்போது, அந்த இடத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்படி அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு குடும்பத்துடன் சென்ற ஒருவர் ஜாலியாக அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்தார்.
அதன் பிறகு, அவர் தனது பயணத்தின் வீடியோவை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். ஜாரவா பழங்குடியின மக்கள் தொடர்பான காட்சிகள் வீடியோவில் உள்ளன. அதைப் பார்த்த அந்தமான் அதிகாரிகள் யூடியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட சமூகமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக படமெடுத்து யூடியூப்பில் பதிவேற்றியதாக அந்த சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கப்பட்டது.
விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், பிரபல யூடியூபர் சஞ்சய் குமார் சுவாமி அந்தமானுக்குச் சென்று ஜாரவா பழங்குடியின மக்கள் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தமானில் ஜாரவா பழங்குடியினரை வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் சுற்றுலா பயணிகள் அப்படி ஒரு விதி இருப்பது தெரியாமல் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்குகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!