ஊட்டி மலை ரயிலின் 153 பிரம்மாண்ட ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள்!

 
ஊட்டி மலை ரயில் ஊட்டி மலை ரயில்

நீலகிரி மலையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் கனவுப் பயணமாகவும் திகழும் ஊட்டி மலை ரயில், இன்று தனது 153-வது ஆண்டு பயணத்தைத் தொடங்குவதை ஒட்டி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குச் செல்லும் இந்த மலை ரயில், மேகக் கூட்டங்களுக்கு இடையே தவழ்ந்து செல்லும் ஒரு சொர்க்கமாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சிறப்பான நாளைக் கொண்டாடும் வகையில், நீராவி எஞ்சின் மற்றும் ரயில் பெட்டிகள் வண்ணமயமான பூக்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மணப்பெண் போலக் காட்சியளித்தன.

ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

மலை ரயிலில் பயணிக்க வந்திருந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், ரயில்வே ஊழியர்களுடன் இணைந்து 153-வது ஆண்டு விழாவைக் கேக் வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 1899-ல் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, இன்றும் தனது பாரம்பரியம் மாறாமல் இயங்கி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மலைகளின் அரசி ஊட்டியை அடைய அருவிகள், குகைகள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக இந்த ரயில் மேற்கொள்ளும் பயணம் ஈடுஇணையற்றது. இதன் தனித்துவமான 'ரேக் மற்றும் பினியன்' தொழில்நுட்பத்தைப் போற்றும் வகையில், கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இது உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

இன்றைய நவீன காலத்தில் பல ரயில்கள் வந்தாலும், ஊட்டி மலை ரயிலில் பயணிக்கும் அந்த 'நாஸ்டால்ஜிக்' அனுபவமே தனி தான் எனப் பயணிகள் சிலிர்ப்புடன் தெரிவித்தனர்.