இந்திய சினிமாவில் புதிய சாதனை - உலகம் முழுவதும் 12,000 திரைகளில் வெளியாகும் ‘டாக்ஸிக்’!

 
டாக்ஸிக் யஷ் யாஷ்

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம், திரையரங்கு வெளியீட்டில் இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதிய சாதனையைப் படைக்கவுள்ளது.

யாஷ்

1940 முதல் 1970-ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற மாபியா பின்னணியைக் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

யாஷ்

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமான முறையில் உலகம் முழுவதும் சுமார் 12,000 திரையரங்குகளில் 'டாக்ஸிக்' திரைப்படம் திரையிடப்பட உள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்திற்கான முன்பதிவு ஆகஸ்ட் 21-ஆம் தேதி (இன்று) முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.