அதிர்ச்சி... திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள பாரம்பரிய நகைகள் மாயம்! போலீசில் புகார்!

 
ராமநாதபுரம்

108 திவ்ய தேசங்களில் 44வது திருத்தலமான, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில்,  ரூ.1 கோடி மதிப்புள்ள பாரம்பரிய நகைகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ராமநாதபுரம்


மூலவருக்கும், தாயாருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, முத்து, பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் திருவிழா காலங்களில் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த நகைகள் அனைத்தும் திருப்புல்லாணி கோயிலில் உள்ளபாதுகாப்பு பெட்டகம் மற்றும் ராமநாதபுரம் அரண்மனையிலுள்ள அறங்காவலர் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன. பெட்டகத்தின் சாவியை கோயில் பரம்பரை ஸ்தானிகர் வைத்திருப்பது வழக்கம்.

ராமநாதபுரம்
இந்நிலையில், ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் பழனிவேல் பாண்டியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷிடம் புகார் அளித்துள்ளார். 
நகைகள் வைத்திருந்த பெட்டகத்தின் சாவியை கோயில் பரம்பரை ஸ்தானிகர் வைத்திருந்த நிலையில், 952 கிராம் தங்க நகைகள், 2400 கிராம் வெள்ளி நகைகள் என ரூ.1 கோடி மதிப்புள்ள பாரம்பரிய நகைகள் காணாமல் போயுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web