ஓணம் பண்டிகை... போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு போனஸ்!

 
கேரளா

 

ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் கேரளாவில் உள்ள போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மாநில அரசு சிறப்பு போனஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதிப் பயன் பெறவுள்ளனர். பண்டிகைக் காலத்தில் அரசு எடுத்துள்ள இந்த முடிவு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேரள போக்குவரத்து துறையில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் தங்கள் ஊதியத்துடன் தலா 10 ஆயிரம் ரூபாயை முன்பணமாகப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர ஊழியர்களுக்குத் தலா 3 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தற்காலிக ஊழியர்களுக்குத் தலா 1 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42,549 ஓய்வூதியதாரர்களுக்குத் தலா 1,250 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகை வழங்குவதற்காக மட்டும் மொத்தம் 33.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓணம் கொண்டாட்டங்கள் மேலும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.