சென்னை மக்களே இந்த பக்கம் போகாதீங்க! காவல்துறை அதிரடி உத்தரவு!

 
சென்னை மக்களே இந்த பக்கம் போகாதீங்க! காவல்துறை அதிரடி உத்தரவு!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் தேதி தமிழகத்தில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை மக்களே இந்த பக்கம் போகாதீங்க! காவல்துறை அதிரடி உத்தரவு!

அந்த வகையில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.


இதையடுத்து மெரினா கடற்கரை சாலையில் 4 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை மக்களே இந்த பக்கம் போகாதீங்க! காவல்துறை அதிரடி உத்தரவு!

அதில்
சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்ல வேண்டும்.

சென்னை மக்களே இந்த பக்கம் போகாதீங்க! காவல்துறை அதிரடி உத்தரவு!


சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர் பிரதான சாலை மற்றும் பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை மெயின் ரோடு இடது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலை செல்ல வேண்டும்.


கண்ணகி சிலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோவில் சந்திப்பிற்கு செல்ல வேண்டும்.

சென்னை மக்களே இந்த பக்கம் போகாதீங்க! காவல்துறை அதிரடி உத்தரவு!


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை கலங்கரை விளக்கம் எம்.ஆர்.டி.எஸ். அருகில் இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை சர்வீஸ் ரோடு வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை சாலை சர்வீஸ் ரோடு வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web