3 நாட்களுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

 
போக்குவரத்து

 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் சென்று இருந்தனர். அவர்கள் இன்று முதல் மீண்டும் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் பயணிகள் வருகை தந்ததால் சிங்கப்பெருமாள் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு சென்னையில் சில போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நேற்று முதல் நெல்லை, குமரி, தூத்துக்குடி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

போக்குவரத்து நெரிசல் தேசிய நெடுஞ்சாலை சொந்த ஊர்

இதேபோல் சொந்த வாகனங்களிலும் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் இன்று ஒரே நேரத்தில் குவிந்ததால், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால், சிங்கப்பெருமாள் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தொடர்ந்து வாகனங்கள் அதிக அளவில் வந்துகொண்டு இருப்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னயில் 3 நாட்களுக்கு சில போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் திருப்போரூர் வழியாக வருவதற்கு பதிலாக, செங்கல்பட்டு வழியாக வர வேண்டும். கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள், ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக வர வேண்டும்.


இதேபோன்று சென்னை வரும் கனரக வாகனங்கள், பரனூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக வரும்படி  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜனவரி 20 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை பிற்பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி பாதையாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.

போக்குவரத்து
போக்குவரத்தை விரைவுபடுத்த ஜிஎஸ்டி சாலையில் ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும். பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web