முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட மேம்பாலம்... பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல்... !

 
பெங்களூரு

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்   மேற்கொண்டு வரும் மெட்ரோ கட்டுமானப் பணிகள் காரணமாக பெங்களூருவின் HSR லேஅவுட்  மேம்பாலம் மூடப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளில் செல்லுமாறு வாகன ஓட்டிகளை  பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த மேம்பாலம் மூடப்பட்டதால் ஏற்கனவே வெளிப்புற ரிங் ரோட்டில்  குறிப்பிடத்தக்க போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்துள்ளது. இதனையடுத்து 
பெங்களூரு போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுக்குமாறு பயணிகளை வலியுறுத்தியுள்ளது.  இது குறித்து பெங்களூரு போக்குவரத்து காவல்துறை சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்   "HSR லேஅவுட்டின் 14வது மெயின் பகுதியில் உள்ள BMRCL சறுக்கும் வளையம் சாய்ந்ததால், மேம்பாலம் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். சில்க் போர்டு நோக்கி செல்லும் போக்குவரத்து 19வது மெயின் வழியாக திருப்பி விடப்படுகிறது. தயவுசெய்து ஒத்துழைத்து அதற்கேற்ப உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்" என தெரிவித்துள்ளது்.


 மேம்பாலம் திடீரென மூடப்பட்டதால் பல பயணிகள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர், வார இறுதியிலோ அல்லது நெரிசல் இல்லாத நேரத்திலோ கட்டுமானப் பணிகள் ஏன் திட்டமிடப்படவில்லை என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இது குறித்து நெட்டிசன்களில் சிலர் ORR மற்றும் ITPL பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பயணிப்பதால்  போக்குவரத்து நிலைமை மோசமடைகிறது. "இதை வார இறுதியிலோ அல்லது இரவு நேரத்திலோ திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில் போக்குவரத்து ஏற்கனவே குழப்பமாக உள்ளது, மேலும் இந்த மூடல் அதை தாங்க முடியாததாக மாற்றியுள்ளது," என கூறியுள்ளார்.  

பெங்களூரு

இதே போல் மற்றொரு பயணி  "ஏன் அதிகாரிகளால் இதை சிறப்பாக திட்டமிட முடியவில்லை? புதன்கிழமை பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது!" என கூறியுள்ளார்.  சில்க் போர்டு மேம்பாலத்தில் கடுமையான நெரிசல் குறித்து பல பயனர்கள் சமூக ஊடகங்களில் புகார் அளித்தனர்.  மக்கள் தங்கள் பயணத்தை மிகவும் திறம்பட திட்டமிட உதவும் வகையில், முக்கிய சாலை மூடல்கள் குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்று கோரினர்.
பெங்களூருவில் போக்குவரத்து நெருக்கடியை மேலும் அதிகரிக்க, யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா கண்காட்சி காரணமாக பெங்களூருவின் வடக்குப் பகுதிகளும் கடும் நெரிசலை சந்தித்து வருகின்றன. வரவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டிற்கு பார்வையாளர்கள் வருகை தர உள்ளனர். இதனால்  ஒட்டுமொத்த போக்குவரத்து நிலைமைகள் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. இருப்பினும், நெரிசலை நிர்வகிக்கவும், வாகனங்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கவும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கூடுதல் பணியாளர்களை நியமித்திருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!