நாசமா போங்கடா.... புதுவை, மதுரையைத் தொடர்ந்து டெல்லியில் அதிர்ச்சி... 4 வயது சிறுமி பலாத்காரம்! ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

 
சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

சமீபமாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அப்போது தான் பிறந்த குழந்தையில் இருந்து 80, 90 வயது மூதாட்டியையும் ஆண்கள் விடுவதில்லை. அடுத்த தலைமுறை ஆண்களைக் குறித்த பயத்துடனே பெண்கள் வாழ்கிறார்கள். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆண் மகனைத் திருத்தி, பெண்களை மதிக்கிற பண்பை சொல்லி வளர்க்க வேண்டியது உடனடி கட்டாயம். 

புதுச்சேரியில் சிறுமி கடத்தி, பலாத்கார போராட்டத்தில் கொலைச் செய்யப்பட்டதைப் போல, மதுரையில் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி  மர்ம மரணம் அடைந்திருக்கிறாள். பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாரா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

VIDEO | Locals gather in Delhi's Pandav Nagar area after a 4-year-old girl was allegedly raped by her teacher. pic.twitter.com/MWJOZtGiM5

— Press Trust of India (@PTI_News) March 24, 2024

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக தலைநகர் டெல்லியில் 4 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உறவினர்களும், அந்த பகுதி மக்களும் தொடர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாடு முழுவதும் ஹோலி கொண்டாட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே மூழ்கியுள்ளார். அதிலும் வட இந்தியர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் இன்னும் அதீத அளவில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், டெல்லி பாண்டவ் நகரில் 4 வயது சிறுமி ஒருவருக்கு அதே பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ள நிலையில்,  உடல் முழுவதும் காயங்களுடன் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

மகள் ரத்தக்காயங்களுடன் அழுது கொண்டே வருவதைப் பார்த்து பதறியடித்த பெற்றோர், இது குறித்து விசாரித்த போது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், சம்பந்தப்பட்டவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஒருவரை கைது செய்த போது, தொடர்ந்து பாண்டவ் நகர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web