அடுத்தடுத்து சோகம்.. மருமகள் தூக்கிட்டு தற்கொலை.. துக்கம் தாங்காமல் மாமியார் எடுத்த விபரீத முடிவு!

 
 மணிமேகலை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா நெடுஞ்சேரி புதர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ரஞ்சிதா (வயது 21) இவருக்கும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிவண்ணனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து மணிவண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

ரஞ்சிதா தனது மாமனார் மற்றும் மாமியார் மணிமேகலையுடன் (51) வானவநல்லூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த 27ம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சிதா துப்பட்டாவால் மின் விசிறியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மீஞ்சுருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிவண்ணன் மீண்டும் ஊருக்கு வந்தார்.

ரஞ்சிதா இறந்த துக்கத்தில் மணிவண்ணனும், மணிமேகலையும் கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை, மணிவண்ணன் ஆகியோர் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. நேற்று அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது மணி மேகலை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன் ஆகியோர் அக்கம் பக்கத்தில் உள்ள மணி மேகலையை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர், வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது, வைக்கோல் கட்டி அருகே மணிமேகலி மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மணிமேகலையை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசெல்வன் வழக்குப்பதிவு செய்து மணி மேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்தும் விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் மணிமேகலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகள் இறந்த துக்கத்தில் மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web