ஷகிரா இசை நிகழ்ச்சியில் சோகம்... மேடை அமைக்கும் பணியில் விபத்து - ஊழியர் உயிரிழப்பு!

 
ஷகிரா ஷகிரா

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள புகழ்பெற்ற கோபகபானா கடற்கரையில் நடைபெற இருந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு முன்பாக நிகழ்ந்த இந்த விபத்து, சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாப் பாடகி ஷகிரா பங்கேற்கும் "டோடோ முண்டோ நோ ரியோ" (Todo Mundo No Rio) என்ற இசை நிகழ்ச்சி வரும் மே 2, 2026 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஷகிரா

கடந்த சில வாரங்களாகப் பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மேடையின் மேல்பகுதியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கோர விபத்தில் தொழிலாளர் ஒருவர் சிக்கினார்.

விபத்தில் சிக்கிய ஊழியரை சக தொழிலாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். மேடை அமைக்கும் போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து உள்ளூர் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷகிரா

இந்தத் துயரச் சம்பவத்தால் மேடை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.