35 வயதில் சோகம்... 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நடிகர் மைக்கேல் பேட்ரிக் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் மைக்கேல் பேட்ரிக் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் மைக்கேல் பேட்ரிக்

உலகப் புகழ்பெற்ற 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மற்றும் 'ப்ளூ லைட்ஸ்' போன்ற தொடர்களில் நடித்துப் பிரபலமான ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பேட்ரிக், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 35.

கடந்த 3 ஆண்டுகளாக மைக்கேல் பேட்ரிக் அரிய வகை தசை மற்றும் நரம்பு மண்டல நோயால் (MND - Motor Neurone Disease) பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள தசைகளை இயக்கும் நரம்பு செல்கள் சிதைவடையும் இந்தப் பாதிப்பிற்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் மைக்கேல் பேட்ரிக்

கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் பேட்ரிக் தனது எதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர். உலகத்தையே கட்டிப்போட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸ் இந்தத் தொடரில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் வெளியான இந்தப் போலீஸ் தொடரில் ஒரு துடிப்பான அதிகாரியாக நடித்துத் தனது திறமையை நிரூபித்திருந்தார்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் மைக்கேல் பேட்ரிக்

35 வயதிலேயே ஒரு சிறந்த கலைஞன் மறைந்தது ஹாலிவுட் மட்டுமின்றி, அவர் நடித்த தொடர்களை விரும்பிப் பார்க்கும் இந்திய ரசிகர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சக கலைஞர்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.