திருவிழாவில் சோகம்... பட்டாசு வெடித்து சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம்!

 
வெடி விபத்து
சேலம்  மாவட்டத்தில், கோயில் திருவிழாவின் போது, பட்டாசு வெடித்ததில் விபத்து ஏற்பட்டு, 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக படுகாயமடைந்தவர்கள்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் குழி இருசாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று திருவிழாவின் ஒருபகுதியாக வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது இடைப்பாடி இளவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (26) என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பட்டாசு வைத்திருந்தார்.

அப்போது வானத்தில் வெடித்து சிதறிய தீப்பொறி ஒன்று இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசு பாக்சின் மீது பட்டு வெடித்து சிறியது. இதில் இருசக்கர வாகனத்தின் மீது உட்கார்ந்து இருந்த சக்திவேலுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதே போல் திருவிழாவை பார்க்க வந்திருந்த ஓமலூர் கமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் கவின் (9) என்பவரும் பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்தார்.

Salem

இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டாசு வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த இருவருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மருத்துவமனையின் டீன் மணி கூறுகையில், திருவிழாவின் போது பட்டாசு வெடி விபத்தில் சக்திவேல், கவின் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதில் சக்திவேல் என்பவருக்கு 75 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதனிடைய பட்டாசு வெடி விபத்தின் போது திருவிழா பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை ரோந்து வாகனம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியை காட்சிகளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ரோந்து வாகனத்தின் பின்புறம் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்படும்போது சுதாரித்து கொண்ட ரோந்து வாகனத்தின் ஓட்டுனர் உடனடியாக ரோந்து வாகனத்தை அவசரமாக எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web