சென்னையில் துயரம்... காதலிக்குமாறு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி; அண்ணன், தம்பி கைது!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சென்னை பூந்தமல்லி அருகே காதலிக்குமாறு வற்புறுத்தி வீடு புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மனமுடைந்த 17 வயது கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகச் சகோதரர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் (19). கல்லூரி மாணவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரோகித்தின் நடத்தை சரியில்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக அந்த மாணவி அவருடன் பேசுவதைத் தவிர்த்து விலகி இருந்துள்ளார்.

தற்கொலை மாடியில் இருந்து குதித்து

மாணவி தன்னைத் தவிர்ப்பதால் ஆத்திரமடைந்த ரோகித், தனது அண்ணன் விக்னேஷ் (20) என்பவருடன் சேர்ந்து அம்மாணவியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்குப் பெண்ணின் குடும்பத்தினர் முன்னிலையில், தன்னை மீண்டும் காதலிக்குமாறு மாணவியை வற்புறுத்தி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சகோதரர்கள் இருவரும் வீடு தேடி வந்து மிரட்டும் தொனியில் வாக்குவாதம் செய்ததால் மிகுந்த மனவேதனைக்கும் அவமானத்திற்கும் உள்ளான மாணவி, திடீரென வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். மாடியிலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்த மாணவியைக் குடும்பத்தினர் உடனடியாக மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் காதலர்கள் இளம்பெண் லிப்ட் தனிமை பாலியல்

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவி 18 வயது பூர்த்தியடையாதவர் என்பதால், ரோகித் மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர்.

மனநல உதவி: தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடத் தமிழக அரசின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணி நேரமும் செயல்படும்) சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 - 24640050