கடலூரில் சோகம்.. புதுப்பெண் தற்கொலை; கணவர் கைது!

 
புதுப்பெண்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே திருமணமான மூன்றே மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து கணவர் தூக்கிலிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் இயந்திர ஆபரேட்டரான பாலமணிகண்டன் (30) என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த நிவேஷா (25) என்பவரும் காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இவர்களுக்குக் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

பள்ளி மானவி தற்கொலை

திருமணத்திற்குப் பிறகு பாலமணிகண்டனின் மதுப்பழக்கம் தெரிய வரவே, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குடும்பத்தினர் அவ்வப்போது இருவரையும் சமாதானப்படுத்தி வந்துள்ளனர். வழக்கம் போல் கணவர் மது அருந்திவிட்டு வந்ததால் மனமுடைந்த நிவேஷா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

அறைக்குள் வந்து பார்த்த பாலமணிகண்டன், மனைவி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தானும் வேட்டியால் தூக்குப் போட்டுக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரைத் தூக்கிலிருந்து உடனடியாக மீட்டு உயிருடன் காப்பாற்றினர். சம்பவ இடத்திற்கு வந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர், நிவேஷாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் பாலமணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.