கன்னியாகுமரியில் சோகம்.. கல் குவாரி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் மரணம்!

 
கல் குவாரி

கன்னியாகுமரி மாவட்டம் அருகே அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில், நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் திடுக்கிடும் விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் விருசடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் டிராவிட் ஆகிய இரு இளைஞர்கள், ஒரே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்துள்ளனர். விருசடி பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரத்திலிருந்த தடுப்புகளைத் தாண்டி அருகிலிருந்த பாழடைந்த கல் குவாரியின் ஆழமான பள்ளத்திற்குள் பாய்ந்தது.

மழைக்காலம் என்பதால் அந்தப் பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருந்தது. பைக்கோடு பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் இருவரும், ஆழமான தண்ணீரில் மூழ்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

அப்பகுதியிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், அஞ்சுகிராமம் காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாகராஜ் மற்றும் டிராவிட் ஆகிய இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அஞ்சுகிராமம் போலீசார், விபத்துக்கான முதன்மை காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.