தமிழகத்தில் துயரம்... கனமழையால் ஆதிச்சநல்லூரில் நீரில் மூழ்கிய முதுமக்கள் தாழிகள்!

 
முதுமக்கள் தாழி தூத்துக்குடி ஆதிச்சநல்லூர்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அகழாய்வுக் குழிகளில் மழைநீர் பெருக்கெடுத்துத் தேங்கியதால் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் நீரில் மூழ்கியுள்ளன.

ஆதிச்சநல்லூர் அகழாய்வுக் களத்தில் தேங்கியுள்ள மழைநீரால், வரலாற்றுச் சிறப்புமிக்க முதுமக்கள் தாழிகள் மற்றும் அவற்றுள் உள்ள பழங்காலத் தொல்பொருட்களும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு

கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூரைகள் மழைநீரைத் தாங்கும் வகையில் வலுவாகவும் போதுமானதாகவும் இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

முதுமக்கள் தாழி அகழ்வாராய்ச்சி

இப்பகுதியில் அறிவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் மிகவும் மந்தமான போக்கிலேயே நடைபெற்று வருவதாகவும், தொல்லியல் எச்சங்களைப் பாதுகாக்கத் உடனடியாகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.