திருப்பத்தூரில் துயரம்... 6 வயது சிறுவன் தொண்டையில் பலூன் சிக்கியதால் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

 
பலூன்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த போது பலூன் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார் - சத்தியா தம்பதியினரின் 6 வயது மகனான சோம்நாத். பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டிற்குத் திரும்பிய போது, சிறுவன் சோம்நாத் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பலூன்

மயக்கமடைந்த சிறுவனை மீட்பதற்காகப் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவனது தொண்டைப் பகுதியில் பலூன் ஒன்று சிக்கியிருந்ததைக் கண்டறிந்தனர்.

பலூன்

விளையாடும் போது பலூனை வாயில் வைத்ததால் அது தொண்டைக்குள் சென்று சிக்கி, மூச்சுத்திணறல் (Choking) ஏற்பட்டதே சிறுவனின் உயிரிழப்பிற்குக் காரணம் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய குழந்தைகள் பலூன்களுடன் விளையாடும் போது பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.