திருவண்ணாமலையில் பெரும் சோகம்: ஏரியில் மூழ்கி 5 பேர் பலி; குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்!
திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி 4 மாணவிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆணாய்பிறந்தான் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த மாணவிகள் விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாள் மற்றும் காப்பகப் பணியாளர் தேன்மொழி ஆகியோர் சமுத்திரம் பெரிய ஏரிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி ஐந்து பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவர்களின் உடல்களை மீட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
