பாத்ரூம் கதவைத் தட்டி இழுத்துச் சென்ற துயரம்... போராடிய மருத்துவப் பணியாளர்கள் கைது!

 
மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பொழுது கழிவறைக்குள் சென்றவர்களையும் விடாமல் கதவைத் தட்டி இழுத்துச் சென்று கைது செய்ததாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், தங்களது நீண்டநாள் கோரிக்கையான 'பணி நிரந்தரம்' செய்யப்படுவதை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரினர்.

மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்குத் திரண்ட மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

கைது நடவடிக்கையின்போது காவல்துறையினர் தங்களை அராஜகமாக நடத்தியதாகத் தெரிவித்த போராட்டக்காரர்கள், கழிவறைக்குள் சென்றவர்களையும் விடாமல் கதவைத் தட்டிக் கைது செய்ததாகவும், காவல்துறையினர் தங்களை அடித்