ஈரோடு அருகே சோகம்... கார் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழப்பு!

 
கார் விபத்து

ஈரோடு மாவட்டம் பருவாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட்டுவிட்டுத் திரும்பிய காய்கறி வியாபாரி மீது கார் மோதிய விபத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெட்ரோல் போட்டுவிட்டுத் திரும்பியபோது விபத்து: பவானி நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (46) என்ற காய்கறி வியாபாரி, பருவாச்சியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்பிவிட்டு பவானி சாலையில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பருவாச்சி காந்திநகர் பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக அன்பழகனின் வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது.

பள்ளி மானவி தற்கொலை

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுப் பவானி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அன்பழகன் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற கார் ஓட்டுநரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.