#TRAIN ACCIDENT: கவனக்குறைவே விபத்திற்கு காரணம்... முதற்கட்ட தகவல் வெளியானது!

 
ரயில்
 

தமிழகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கவனக்குறைவே விபத்திற்கான காரணம் என்று முதற்கட்ட தகவல் அறிக்கையில் வெளியாகியுள்ளதாக தெரிய வருகிறது. கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே தான் ரயிலை மேற்கொண்டு இயக்கியதாக பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை ஓட்டிச் சென்ற லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் விபத்து

முன்னதாக மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 12 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. விடிய விடிய ஊழியர்கள் மீட்புபணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், 12 மணி நேரத்திற்கு மேலாகியும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கவனக்குறைவே ரெயில் விபத்திற்கு காரணம் என ரயில்வே இருப்புப்பாதை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நல்வாய்ப்பாக ரயில் நிலையத்திற்கு அருகிலேயே விபத்து நேரிட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகத்தில் சென்று மோதவில்லை. அதனால் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை..  

மும்பை பயணிகள் ரயில்

விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரயிலை இயக்கியதாக பாக்மதி விரைவு ரெயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.  ரெயில் விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் மணிபிரசாத் பாபு கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.