தடம் புரண்டுபயணிகள் ரயில் விபத்து!! கனமழையால் அடித்து செல்லப்பட்ட தண்டவாளக்கற்கள்!!

 
ரயில் விபத்து

உலகம் முழுவதும் ஒரு புறம் பெருமழை மறுபுறம் தாங்க முடியாத வெயில் என மக்களை வதைத்து வருகிறது. வெயில் தாங்காமல் வீட்டுக்குள் ஒரு புறம் தஞ்சம் அடையும் மக்கள் மறு புறம் மழை வெள்ளத்தால் நிவாரண முகாம்களில் குடியேறி வருகின்றனர். சீனாவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து நாடே வெள்ளத்தில் மூழ்கி வருகிறது 10லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

பெருமழை

அந்த வகையில் ஸ்வீடனில் பெய்த கனமழையால் ரயில் பாதைகளில் தண்டவாளங்களில் போடப்பட்ட ஜல்லிக்கற்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் 100க்கும் மேற்பட்ட  பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் பயணிகள், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ரயில்களை இதுவரை பயன்படுத்தி வந்த மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.

சீன கனமழை


ஸ்வீடன் நாட்டின் கிழககு பதியில்  தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான நார்வேயிலும் பெருமழை காரணமாக முற்றிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web