சேலத்தில் ரயில் சேவைகள் ரத்து... தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அரக்கோணம் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஜனவரி 20 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை செயல்பாட்டு காரணங்களுக்காக பின்வரும் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரக்கோணத்தில் இருந்து 5:15 மணிக்கு புறப்பட்டு சேலம் ஜங்ஷனில் 10:50 மணிக்கு வந்தடையும். ரயில் எண் 16087 அரக்கோணம் – சேலம் மெமு ரயில் வாரத்தில் 5 நாட்கள் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் ஜங்ஷனில் இருந்து 15:30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்தில் 20:45 மணிக்கு வந்தடையும். ரயில் எண் 16088 சேலம் – அரக்கோணம் மெமு ரயில் வாரத்தில் 5 நாட்கள் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க