சென்னையில் இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி… பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்.!

 
மின்சார ரயில்


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜனவரி 25ம் தேதி இன்று இங்கிலாந்து - இந்தியா   டி20 போட்டி நடக்க உள்ளன. இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2வது போட்டி இன்று சென்னையில்  நடைபெறுகிறது.  

இந்நிலையில், போட்டியைக் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக பயணத்தை எளிதாக்கும் வகையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் ரயில்


அதன்படி, கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவலை  எக்ஸ் பதிவு வாயிலாக உறுதி செய்து கொள்ளலாம். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web