பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவ.14ல் தொடங்குகிறது... மிஸ் பண்ணாதீங்க!
2027 ஜனவரி மாதம் கொண்டாடப்படவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் நவம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8:00 மணிக்குத் தொடங்குகிறது.
பொதுமக்கள் நீண்ட தூரப் பயணங்களுக்குப் பேருந்துகளை விடக் கட்டணம் குறைவான மற்றும் பாதுகாப்பான ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். ரயில்களில் பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.

2027 ஜனவரி 14 (வியாழக்கிழமை) போகி பண்டிகையும், ஜனவரி 15 (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளன. வார இறுதி நாட்களுடன் சேர்த்துத் தொடர் விடுமுறை வருவதால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் பயணிக்கும் தேதிகளுக்கு ஏற்ப டிக்கெட் முன்பதிவு செய்யும் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது: ஜனவரி 13 (செவ்வாய்) பயணம் செய்ய: நவம்பர் 14, 2026 ஜனவரி 14 (போகி - வியாழன்) பயணம் செய்ய: நவம்பர் 15, 2026 ஜனவரி 15 (பொங்கல் - வெள்ளி) பயணம் செய்ய: நவம்பர் 16, 2026. ஜனவரி 16 (மாட்டுப் பொங்கல் - சனி) பயணம் செய்ய: நவம்பர் 17, 2026

முன்பதிவு தொடங்கும் நாளன்று ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் வழக்கமான ரயில்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான ரயில்களில் டிக்கெட்டுகள் முற்றிலும் விற்றுத் தீர்ந்த பிறகு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகள் பின்னறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
