ரயில் பயணிகள் கவனத்திற்கு! மே மாதத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்!
திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெறவுள்ள தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை - குருவாயூர் இடையே இயக்கப்படும் புகழ்பெற்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மே மாதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட நாட்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி
சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் (மே 2, 9): காலை 10.40 மணிக்குத் தடையின்றிப் புறப்படும். இருப்பினும், பராமரிப்பு பணி காரணமாக வழியில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுத் தாமதமாகச் சென்றடையும்.
மே 4 மற்றும் 14-ந் தேதிகள்: இதே ரயில் வழியில் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.
குருவாயூரில் இருந்து சென்னை வரும் ரயில் (மே 2, 28): இரவு 11.15 மணிக்கு வழக்கம்போல் புறப்படும். ஆனால், சென்னை எழும்பூர் வந்தடையும் போது வழியில் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
தொடர் விடுமுறை மற்றும் கோடை விடுமுறை காலம் என்பதால், இந்த ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் இந்தத் கால மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் இந்த முன்னெச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.
